வாஷிங்டன்: உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இன்றும் கறுப்பர்கள்/வெள்ளையர்கள் என்று நிறவெறிக்கொள்கை பார்க்கப்பட்டு வருவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
'தி கல்லுப் போல்' என்ற பெயரில் நிறவெறிக்கொள்கை தொடர்பாக கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 10 அமெரிக்கர்களில் 6 பேர் நிறவெறிக்கொள்கை இன்னமும் அமெரிக்காவில் இருந்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் இந்த நிறவெறிக்கொள்கை அதிகம் பரவிக்கிடப்பதாக 61% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் வெள்ளையர்களுக்கெதிரான நிறவெறிக்கொள்கை 8 புள்ளிகள் கூடுதலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாஷிங்டன் நகரில் வெளியாகும் 'ஜின்ஹூவா' என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருப்பர்களில் 82% பேரும், வெள்ளையர்களில் 56% பேரும் கருப்பர்களுக்கு எதிராக நிறவெறிக்கொள்கைகள் பரவிக்கிடப்பதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த வருடங்களில் 10% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வெள்ளையர்களில் 43% பேரும், கருபர்களில் 33% பேரும் வெள்ளையர்களுக்கு எதிரான நிறவெறிக்கொள்கைகள் பரவிக்கிடப்பதாக அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை 3270 அமெரிக்கர்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 1320 கலப்பின வெள்ளையர்களும், 912 கலப்பின கருப்பர்களும் அடங்குவர். கல்லூப் சிறுபான்மை உரிமை மற்றும் தொடர்பு கணக்கெடுப்பின் படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
வெள்ளைக்கார காவல்துறையினரால் சில கருப்பர்கள் கடந்த 2014-2015 ஆண்டுகளில் கொல்லப்பட்டபோது கருப்பர்களுக்கு எதிரான நிறவெறிக்கொள்கை இருப்பதாக ஏற்பட்ட உணர்வுகள் அதிகரிக்க துவங்கியதாக கல்லூப் தெரிவித்துள்ளது.
இவ்வருடமும் காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்குமிடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் கருப்பினத்தைச்சேர்ந்த ஒருவர் 8 வெள்ளை காவல்துறை அதிகாரிகளை சுட்டுக்கொன்றிருக்கிறான். ஆனால் இந்த சம்பவம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்ட பிறகு நடைபெற்ற சம்பவமாகும்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்காவின் அதிபராக ஆனதற்கு பிறகு இருந்த நிறவெறி தாக்குதல்களை விட இன்று அதிகம் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். என்னதான் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும் மனிதனுக்குள்ளே ஏற்றத்தாழ்வு உண்டு என ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் கொண்டவர்கள் அமெரிக்காவில் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்றாக அமைகிறது.

No comments:
Write comments