டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்திய சுதந்திர தினவிழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிரதமர் மோடியின் வருகையின் போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
பிரதமர் சுதந்திர தின உரையாற்றும் செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கொடியேற்றிவைத்து விட்டு உரையாற்றிய பிரதமர் கூறும்போது "சுதந்திரம் என்பது எளிதில் கிடைக்க கூடிய விஷயம் அல்ல, அனைத்து இந்தியர்களும் சுதந்திரத்திற்காக போராடினர். இன்றைய தினம் நான் கொள்ளைகள் பற்ரி பேசப்போவதில்லை, தொலை நோக்கு திட்டம் குறித்து பேசவிருக்கிறேன் என்றார். இந்திய தேசம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் அனைத்து சவால்களும் தீர்வு காணும் திறன் நம் மக்களிடம் இருக்கிறது. இந்தியாவை இதற்கு முன் ஆண்ட அரசை சுற்றி சந்தேக வலைகளே இருந்தன. ஆனால் தற்போதை அரசு சுற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன. சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது. சாமான்யர்கள் மேம்பாட்டை பொறுப்புணர்சியுடன் அரசு நிகழ்த்தி வருகிறது என்று உரையாற்றினார்.
பண வீக்கம், ஊழல் ஒழிப்பு, அடிப்படை வசதி, விவசாயம், மின்சாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தொடர்பான தமது அரசின் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய மந்திரிகள், உயர் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். பாரம்பரியம் மிக்க டெல்லி செங்கோட்டை மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். விழா நடைபெற்ற பகுதியில் யாரும் எளிதில் நுழைய முடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:
Write comments