Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 15, 2016

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்களின் திறந்த மடல்!


புது டெல்லி.
14.08.2016.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று நள்ளிறவு முதல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல்துறையின் இடையூறாலும், காவல்துறையின் ஆடை அணியாத சில சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களாலும் தான் தாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக கூறியுள்ளனர் மாணவர்கள்.
நேற்று நள்ளிரவு டெல்லி காவல்துறையும், அடையாளம் தெரியாத நபர்களும் பல்கலைகழக மாணவர் குடியிருப்பில் எந்த வித அனுமதியும் இன்றி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விசயம் அறிந்து வந்த குடியிருப்பின் மேலாளர் தங்களுக்கு இந்த சோதனை குறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மாணவர்கள் குடியிருப்பில் எப்படி சோதனை நடத்தலாம் என்று கேட்டதற்கு, காவல்துறையினர் தாங்கள் சோதனை நடத்த மட்டும்தான் வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து டெல்லி டி.சி.பி-க்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளனர்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் சிறுபான்மை மக்களால் நடத்தப்படுவதால் அரசு அதிகாரிகளாலும் ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளாலும் குறி வைக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மட்டும் ஏன் காவல்துறையின் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் டெல்லி மாநகரில் உள்ள டெல்லி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர் மற்றும் ஏராளமான பல்கலைக்கழகங்கள் இதேபோல் சோதனைக்கு உட்டுத்தப்பட்டுள்ளதா? என மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் தங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic