இந்திய சுதந்திர தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றினார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இதேபோல் மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.
தமிழக அரசின் சார்பில் சென்னை சென்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் வரவேற்றார். முதலமைச்சர் ஜெயலலிதா காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் கொத்தளத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேசியக் கொடியை ஏற்றம் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி. நாட்டின் சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கும் உண்டு. சுதந்திர போராட்டத்தில் தமிழக வீரர்களின் பங்கு மகத்தானது. விடுதலைக்கான வேட்கையை தட்டி எழுப்பியவர் வாஞ்சிநாதன் என முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.

No comments:
Write comments