Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

மாடுகளை ஏற்றிச்சென்றவர் அடித்து கொலை - உடுப்பியில் பயங்கரம்!


பசு காவலர்களால் நடத்தப்பட்ட இன்னுமொரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசுகாவலர்களில் பெரும்பாலும் சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுகிறவர்கள். அவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும், யாருக்கும் சட்டத்தை தன் கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்த போதும் பசுகாவலர்களால் தொடர்ந்து பலரும் தாக்கபப்ட்டு வருகின்றனர். தற்போது கர்நாடக மாநிலம் உடுப்பியில் மாடுகளை ஏற்றிச்சென்றவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட பிரசாந்த் பூஜாரி என்பவர் தனது நண்பர் அக்ஷேய் தேவடிகாவுடன் மாடுகளை ஏற்றிச்சென்றிருக்கிறார். அவரை 'ஹிந்து ஜக்ரன் வேதிகே' என்ற இந்து அமைப்பைச்சேர்ந்தவர்கள் இருவரையும் ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் உயிரிழந்தார். அவரது நண்பர் அக்ஷேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மாதம் குஜராத் உனா மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்ததற்காக தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். அன்று முதல் நாட்டில் பசுகாவலர்களின் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பசு காவலர்களுக்கு எதிராக மோடி பேசிய கருத்துக்களை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா உட்பட பல இந்து அமைப்புகளும் கண்டித்துள்ளனர். இந்து மஹா சபை மோடிக்கு பிரதமராக தொடர்வதற்கான தகுதி இல்லை என கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic