Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 17, 2016

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறார் டிரம்ப்


ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிற்கு சாதகமான சூழ்நிலைகளை டொனால்ட் டிரம்ப் உருவாக்கி வருவதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான் தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் கூறியதாவது "டொனால் டிரம்ப் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார். டிரம்பின் சிந்தனைகள் தவறானதாக மட்டும் இருக்கவில்லை மாறாக ஆபத்தானதாகவும் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தை பற்றிய புரிதல் டிரம்பிற்கு இல்லை. அவர் அறியாமையில் பேசி வருகிறார். அத்தோடுமட்டுமல்லாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் அவர் பரப்பி வருகிறார். அவர் கூறிய கருத்துக்கள் அமெரிக்க மக்களை பிரிக்கும் படி செய்துவிடும் என்பதை அவர் உணர மறுக்கிறார். நம்மிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்றுதான் ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டம் தீட்டி வருகின்றனர். அவர்களின் திட்டத்திற்கு நாமே சென்று இரையாகிவிடக்கூடாது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழ்நிலையை டிரம்ப் உருவாக்கி வருகிறார்." இவ்வாறு ஜோ பிடென் தெரிவித்துள்ளார்

கடந்த வாரத்தில் புளோரிடாவில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற டிரம்ப், ஒபாமாவும், ஹிலாரி கிளிண்டனும் தான் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்கள் என தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic