Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

எனது வாயை யாராலும் அடைத்துவிடமுடியாது..! - சு.சாமி


எல்லோரும் சேர்ந்து என்னை முடக்கிவிட்டதாகவும், இனி மேலும் சு.சாமி எந்த விசயத்திற்காகவும் வாய் திறக்கமாட்டார் என்று சிலர் கூறுகிறார்கள். எனது வாயை யாராலும் அடைத்துவிடமுடியாது என சுப்பிரமணிய சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்கு பெயர் போன சுப்பிரமணிய சுவாமி கடந்த சில மாதங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவர் இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் சு.சாமியின் இந்த கருத்துக்கு பா.ஜ.க தலைமை சட்டை செய்யவே இல்லை.

அதன் பின்னர் பிரதமரின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்த அர்விந்த் சுப்பிரமணியன் மீதும் சுப்பிரமணிய சாமி குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லியையும் சாடினார் சு.சாமி. பிதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த போது "எனது கட்சிக்காரர்களாகவே இருந்தாலும், என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்து கவனமாக பேசவேண்டும். தேவையில்லாத விவகாரங்களை கிழப்பி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது நாட்டுக்கு ஒருபோதும் பயன் தறாது" என மறைமுகமாக சுப்பிரமணிய சுவாமியை எச்சரித்தார் மோடி.

பிரதமரின் இந்த பேட்டிக்கு பிறகு சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வளவாக கருத்துக்கள் பதிவதை நிறுத்திக்கொண்டார். இதனை கிண்டலடித்த காங்கிரஸ் கட்சி சுப்பிரமணிய சாமியின் வாய்க்கு பூட்டு போடப்பட்டுவிட்டது. இனி அவர் வாயே திறக்க மாட்டார் என தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது டுவிட்டரில் கருத்து பதிவு செய்த சு.சாமி "எனது வாயை யாராலும் அடைத்துவிடமுடியாது. சமூக வலைத்தளங்கள் போன்ற மக்களை நேரடியாக சந்திக்கும் ஊடகங்கள் இருக்க, ஒருபோதும் எனது கருத்துக்களை எனக்குள் அடைத்துவைக்கமாட்டேன்" என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic