இப்பொழுதுதான் இந்திய ரசிகர்கள் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். காரணம் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பதக்கம் கிடைத்துவிட்டது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் சாக்ஷி மாலிக் வெண்கலப்பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 58 கிலோ எடைப்பிரிவில் கிர்கிஸ்தானின் டைனி பெகோவாவை 8-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த சாக்ஷிக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்துள்ளது.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது, சாக்ஷ்டி மாலில் வரலாறு படைத்தா! வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கிற்கு எனது வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த தேசமும் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளது. ரக்ஷா பந்தன் நாளில் இந்தியாவின் மகள் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றும், நம்மை பெறுமை அடையச் செய்துள்ளார். சாக்ஷி மாலி வரும் ஆண்டுகளில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பார் என தெரிவித்துள்ளார்.
No comments:
Write comments