Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 16, 2016

கர்வம் குறையாத அரசியல் தலைவர்கள்


தான் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி, தான் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு கொண்டவன். என்னதான் படித்து  பெரிய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் அவர்கள் எனக்கு கீழ் வேலை செய்யும்போது அவர்களை என்னுடைய அடிமைகளைப்போலவே கருதுவேன் என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் இன்னமும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஒடிசா மாநில அமைச்சர் ஜோகேந்திர பெஹாரா ஓர் சிறந்த உதாரணம்.

நேற்றைய தினம் ஒடிசா மாநில சிறு மற்றும் குறுந்தொழில் துறை அமைச்சர் ஜோகேந்திர பெஹாரா தலைநகர் கெயோஞ்சரில் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்தார். கொடி ஏற்றும்போது அவரது செருப்பு நழுவி கழன்றுவிட அதனை அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரு குனிந்து மாட்டிக்கொண்டிருந்தார்.  இச்சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டனர். இதனால் அமைச்சருக்கு பலதரப்பு மக்களிடம் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தான் தெரியாமல் செய்துவிட்டேன், எனது அனுமதியில்லாமல் அந்த பாதுகாப்பு அதிகாரிதான் செருப்பை மாட்டிவிட்டார் என ஏதாவது சாக்கு சொல்லியாவது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் அகம்பாவத்தின் உச்சிக்கு சென்ற அமைச்சர் " நான் மிக முக்கிய பிரமுகர். நான் தான் தேசிய கொடியை ஏற்றினேன். அவர் அல்ல" ஏன் அவரது செயலை புகைப்படம் எடுத்தீர்கள், நான் கொடியேற்றுவதை மட்டுமே எடுத்திருக்க வேண்டும் என்கிற தோணியில் பதில் அளித்திருக்கிறார்.

அமைச்சரின் இந்தி திமிரான பேச்சுக்கும் அவரது செயல்களுக்கும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் நவீன் பட்னாயக்கை பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic