Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

ஹபீஸ் சயீதிற்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்கள் பத்வா...!


மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பாகிஸ்தானைச்சேர்ந்த ஹபீஸ் சயீத் இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்றும் அவரை பின்பற்றுகிறவர்கள் அனைவரும் தவறான வழியில் இருக்கின்றார்கள் என உத்திரபிரதேசம் முப்தி முகமது சலீம் பரலேவி பத்வா கொடுத்துள்ளார்.

அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் பகிரங்கமாக உலாவிக்கொண்டிருக்கிறார். அவருடைய தலைக்கு அமெரிக்கா 10 மில்லியன் டாலரை விதித்துள்ளது. கஷ்மீர் விவகாரத்தில் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்து கொண்டு எல்லை மீறிய கருத்துக்களை வெளியிட்டுவருகிறார். சமீபத்தில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரியா ஜெனரல் ரகீல் சரீபிடம் கஷ்மீர் மக்களை பாதுகாப்பதற்காக இந்திய இராணுவத்தை எதிர்த்து சண்டையிட பாகிஸ்தான் இராணுவத்தை கஷ்மீருக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த கருத்தை தொடர்ந்தே அவருக்கு எதிரான பத்வாவை தர்கா அலா ஹஜ்ரத் என்ற நிர்வாகம் வழங்கியுள்ளது. அவர்கள் வழங்கிய அந்த பத்வாவில் மேலு கூறியிருப்பதாவது, ஹபீஸ் சயீதிற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அல்லாவிற்கு, முகமது நபிக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக ஹபீஸ் சயீத் செயல்படுவதாகவே நாங்கள் கருதுகிறோம். மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இப்படி இருக்கையில் அவரை முஸ்லிம் என்றே கருத முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் பெயர்களை கொண்டு எவரெல்லாம் அல்லாவிற்கு, முகமது நபிக்கும் எதிராக செயல்படுகிறார்களோ அவர்களை முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியாது. எனவே அவரை முஸ்லிமாகவும் பார்க்க கூடாது, அவரை பின்பற்றி நடப்பவர்கள் அனைவரும் சட்ட விரோதமாக செயல்படுகிறவர்களே எனவே அவரோடு யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என‌ தெரிவித்துள்ளனர்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic