Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 19, 2016

அமெரிக்க நகரங்களில் டிரம்ப் நிர்வாண சிலை


அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் குடியரசுக்கட்சி அதிபர் வேட்பாளர் டொனால் டிரம்பின் முழு நிர்வாண சிலை வைக்கப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

வரும் நவம்பர் 8ஆம் தேதி அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் ஏற்கனவே தேர்வானபடி ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் மோதுகின்றனர். ஆரம்பம் முதலே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை டொனால்ட் டிரம் தெரிவித்து வருவதால அவருக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.

தேர்தல் பிரச்சாரங்களில் அவர் பேசும் விதம் அவர் கட்சியை சேர்ந்தவர்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களே தாங்கள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை மேலும் கண்டிப்பதற்காக அவருடைய முழு நிர்வாண சிலை அமெரிக்காவின் பல நகரங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லன்ட், சியாட்டில் மற்றும் நியுயார்க் நகரங்களில் வைக்கப்பட்டிருக்கும் டிரம்பின் நிர்வாண சிலையை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு அதனோடு நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இச்செயலை இண்டி கிளின் என்ற அமைப்பே செய்திருக்கிறது. சிலையில் அடியில் "The Emperor Has No Balls" என இரட்டை அர்த்தம் கொண்ட வாசம் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது டொனால்ட் டிரம்பிற்கு ஆண்மை இல்லை என்கிற ரீதியில் அந்த வாசகம் அமைந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு சீனா நாட்டில் டிரம்பை இழிவுபடுத்த நிறுவனம் ஒன்று அவர் புகைப்படம் பொறிக்கப்பட்ட டாய்லட் டிசியு பேப்பர்களை சந்தையில் விற்றபனை செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic