பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் பதாஞ்சலில் நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பிய இந்திய விளம்பர தர கவுன்சில் மீது வழக்கு தொடருவேன் என ராம்தேவ் மிரட்டியுள்ளார்.
பிரபல யோகா சாமியார் பாபா ராம்தேவ். சமீபத்தில் பதாஞ்சலி என்னும் பெயரில் உணவு நிறுவனம் ஒன்றை துவக்கினார். இந்த நிறுவனத்தின் மூலமாக டூத்பேஸ்ட், தேன், நூடுல்ஸ், கூந்தல் தைலம், சமையல் எண்ணெய், சோப்பு உள்ளிட்ட பல பொருட்களை உற்படுத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்தி வருகிறார். சொற்ப காலத்திலேயே பாபா ராம்தேவின் பதாஞ்சலி பொருட்களுக்கு கோடிக்கணக்கான செலவில் விளம்பரம் செய்யப்பட்டது.
எந்த கலப்படமும் இல்லாத, முழுக்க முழுக்க உள்நாட்டு தயாரிப்புகள் என பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அப்படி ஒளிபரபப்படும் விளம்பரங்களில் மற்ற சக நிறுவனங்களின் பொருட்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானது எனவும், அதனை பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்புள்ளது என்கிற ரீதியில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. இப்படி மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல்களை பரப்புவதாக பல்வேறு நிறுவனங்கள் புகார் அளித்துள்ளன.
இதனை ஆய்வு செய்த இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் பதாஞ்சலி நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அதன் நிறுவனத்திற்கு எதிராக 33 புகார்கள் வந்துள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்த்தோர் தெரிவித்தார். மேலும் அதன் விளம்பரங்களில் பல விதிமுறைகளை மீறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய நிறுவனத்தை பற்றி கேள்வி கேட்பதற்கான அதிகாரம் இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சிலுக்கு இல்லை என்றும், கவுன்சிலுக்கு எதிராக வழக்கு தொடரப்போவதாகவும் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். பாபா ராம்தேவின் இந்த பதாஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு பல்வேறு வழிகளில் உதவி செய்துள்ளதாகவும், பதாஞ்சலி நூடுல்ஸை விற்பனைக்கு கொண்டுவருவதற்காகவே மேகி நூடுல்ஸிற்கு தடை விதித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதே போல பாபா ராம்தே தம்மிடமிருந்த கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பதாஞ்சலி நிறுவனத்தை துவங்கியதாகவும் கூறப்படுகிறது.
கூடிய விரைவிலேயே பதாஞ்சலி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளும் நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments