Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 18, 2016

பெண்களை கவர ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புதிய திட்டம்!


பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு நாடு முழுவதும் ஆட்களை தங்கள் அமைப்பில் இணைப்பதற்கு பல்வேறு யுக்திகளை ஐ.எஸ் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பெண்களை கவர்வதற்காக பெண் செய்தி தொடர்பாளரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிடைக்கப்பெற்ற தகவலின் படி, ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒவ்வொருமுறையும் வீடியோ மூலம் செய்திகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வந்திருக்கின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் வீடியோக்களில்  பெரும்பாலும் ஆண்களே தங்களுடைய முகங்களை மறைத்தவாரு செய்திகளை தெரிவிப்பார்கள். தற்போது சற்று வித்தியாசமாக முழு பர்தா அணிந்து ஒரு பெண் பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர்.

அந்த வீடியோவில் தான் ஐ.எஸ் அமைப்பின் பெண் செய்தி தொடர்பாளர் என அந்த பெண் தெரிவித்திருக்கிறார். முகத்தை மறைத்தவாரு பர்தா  அணிந்திருந்தபடியால் அவர் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இதன் மூலம் ஜிஹாதில் ஈடுபடுத்த பெண்களை அதிக அளவில் கவர்வதற்கான முயற்சியில் ஐ.எஸ் அமைப்பினர் ஈடுபட்டுவருவது தெரிகிறது. இதற்காகவே அவர்கள் 'மெஜஸ்டிக்' என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலிருந்து பல்வேறு நாடுகளிலிருந்து தங்கள் வீட்டை விட்டி வெளியேறி சிரியா சென்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic