இந்திய ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் தொடர்பாக தனியார் தொண்டு நிறுவனம் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் கஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஆம்னெஸ்டி இண்டர் நேஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் தனியார் கல்லூரியின் அரங்கில் வைத்து கருத்துரங்கம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் கஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய இராணுவத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் காட்டுத்தீபோல் பரவியதை தொடர்ந்து, மறுநாள் காலை அகில பாரதீய வித்யார்த் பரிஷத் (ஏ.பி.வி.பி) மாணவர் அமைப்பு சார்பில் பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய அரசுக்கு எதிராக, இராணுவத்திற்கு எதிராக கோஷம் போட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையினர் கலைந்துபோக வலியுறுத்தியும் செல்லாத மாணவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இவ்விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறும்போது கருத்தரங்க தொடர்பாக முக்கிய வீடியோ ஆதாரம் தங்களுக்கு கிடைத்துள்ளது எனவும் இதனை தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனம் மற்றும் அதில் பங்கு கொண்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆனான் ஆம்னெஸ்டி இண்டர் நேஷன் இந்தியா தொண்டு நிறுவனம் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்களுக்கு எந்த எஃப்.ஐ.ஆர் நகலும் வரவில்லை என அவர்கள் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Write comments