ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கும், வட இந்திய பா.ஜ.க தலைவர்களுக்கும் மத்தியில் கடும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் புதுடெல்லியிலிருந்து சென்னை வந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தமிழர்களின் பாரம்பரியமிக்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு இருந்தாலும் அது அபாயகரமான விளையாட்டு எனவே அதற்கு ஒரு போதும் அனுமதி அளிக்க கூடாது என தெரிவித்தார். மேலும் தமிழக பா.ஜ.க தலைவர்கள் இது விவகாரத்தில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடவேண்டும் என கூறினார்.
மேனகாவின் இந்த கருத்துக்கு தமிழக பா.ஜ.கவின் முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறும்போது "மேனகா காந்தி கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லா விளையாட்டுகளுமே அபாயகரமானது தான். எல்லா விளையாட்டு வீரர்களும் விளையாடும் போதே அடிப்பட்டு மரணிக்கும் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு மட்டுமே அபாயகரமான விளையாட்டு போட்டி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் உணர்வோடு கலந்துவிட்ட ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. வரும் பொங்கல் பண்டிகையை ஜல்லிக்கட்டு விளையாட்டுடன் கூடி கொண்டாடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக பா.ஜ.க செய்யும்" என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர்களிலேயே ஜல்லிகட்டு விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பெரும் அக்கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஜல்லிகட்டு விவகாரத்தில் பா.ஜ.கவினர் இரட்டை வேடம் போட்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

No comments:
Write comments