சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது எந்த வழக்கும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என அவரது வழக்கறிஞர் சோல்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 1ஆம் தேதி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு ஜாகீர் நாயக் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக அவர் பேசிவருவதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்து வந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு மும்பை காவல்துறையினருக்கு ஆணை பிறபிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த வாரம் தங்களது விசாரணையின் முழு அறிக்கையை மும்பை காவல்துறையினர் மகாராஷ்டிரா அரசுக்கு சமர்பித்தனர். இதன் பின்னர் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது "ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களில் தேசவிரோத கருத்துக்கள் இருந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு தூண்டுதலாக அவர் பேசியிருப்பதாக மும்பை காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாக கூறினார். இதனை அடுத்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஜாகிர் நாயக் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக ஜாகிர் நாயக்கின் வழக்கறிஞர் சோல்கர் கூறியுள்ளதாவது, ஜாகிர் நாயக் இவ்வருடம் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அவரது நீண்ட பயணம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். அதனால் அவர் அடுத்த ஆண்டுதான் இந்தியாவிற்கு திரும்புவார் என எதிர்பார்கப்படுவதாக தெரிவித்தார். அவர் இந்தியாவிற்கு வருவதற்கு தடுக்க வேண்டிய காரணம் எதுவும் இல்லை. மராட்டிய அரசோ அல்லது மற்றவர்களோ யாரும் அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என சோல்கர் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் மீது விசாரணை மேற்கொள்ளப்படலாம் என்பதற்காக அவர் இந்தியா வர மறுக்கிறார் என்று கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. அவர் ஒரு என்.ஆர்.ஐ அவர் தொடர்ந்து தனது நிலையிலேயே உள்ளார். அவர் குறிப்பிட்ட காலம் இந்தியாவிற்கு வெளியே இருக்க வேண்டும். எனவே அவர் கடந்த காலங்களில் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என சோல்கர் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments