Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Aug 15, 2016

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - கெஜ்ரிவால்


டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் சத்திரசல் மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் கெஜ்ரிவால் கொடி ஏற்றிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, "டெல்லி மக்கள் அவர்களது வாக்குகளின் வலிமை ஏன் குறைத்து மதிப்பிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்களால தேர்ந்தெடுக்கப்பட்ட எனது தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு முடிவுகளை எடுக்க எந்த அதிகாரமும் இல்லை. எனவேதான் தங்கள் வாக்குகள் ஏன் மகாராஷ்டிரா, ஹரியாணா, மத்தியப்பிரதேசம் என இன்னும் பிற மாநில மக்களின் வாக்குகள் போல் வலிமையானதாக இல்லை என கேட்கின்றனர்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். டெல்லியில் துணை நிலை ஆளுனருக்கே கூடுதல் அதிகாரம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு மத்திய அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தியுள்லது. கையில் உள்ள குறைந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டே முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

இத்தருணத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை முன்வைக்க விரும்புகிறேன். டெல்லியில் திறன்சார் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.11,600-ல் ரூ.17,000 ஆக உயர்த்தப்படும். முறையான பயிற்சித்திறன் பெற்றிராத தொழிலாளர்களின் ஊதியம் ரூ. 9500-ல் இருந்து ரூ.14,000 ஆகவும் பகுதியாக திறன் பெற்ற தொழிலாளர்கள் ஊதியம் ரூ.10,500-ல் இருந்து ரூ.15,500 ஆகவும் உயர்த்தப்படும்" இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic