Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

78வது நாளாக தொடரும் கஷ்மீர் பிரச்சனை!


க‌ஷ்மீரில் நடந்து வரும் போராட்டம் இன்று 78வது நாளை எட்டியுள்ள நிலையில், பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கியுள்ளது.

க‌ஷ்மீரில் பயங்கரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த ஜூலை 9ஆம் தேதி முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு 80ற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம்அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 78வது நாளை எட்டி உள்ள நிலையிலும், பல இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது.

க‌ஷ்மீரின் உரி, குரேஸ், கர்னா, சரார்-இ-ஷெரீப், கங்கன், பாம்போர், தேவ்சார், சோபியான், கோக்கர்நாக் உள்ளிட்ட பகுதியில் நேற்று சுதந்திர ஆதரவு பேரணி நடத்துமாறு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். எனவே அந்த பகுதிகளில் சாலைகளை முள்வேலிகளை வைத்து அடைத்த பாதுகாப்பு படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் அந்தந்த பகுதிகளில் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என காலையிலேயே ஒலிப்பெருக்கிகள் மூலமும் அறிவுறுத்தப்பட்டது.

இதையும் மீறி பட்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட சரார்-இ-ஷெரீப் பகுதியில் ஏராளமான பேர் பேரணிக்காக கூடினர். அவர்களை கலைந்து செல்லுமாறு படையினர் அறிவுறுத்தினர். ஆனால் சிலர் கலைந்து செல்லாமல் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். எனவே அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பாதுகாப்பு படையினர் கலைத்தனர். இதைப்போல வேறு சில பகுதிகளிலும் பாதுகாப்பு படையினருடன் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதற்கிடையே குப்வாரா, சோபூர், ஹந்த்வாரா, உரி, பந்திப்போரா உள்ளிட்ட மாநிலத்தின் பல நகரங்களில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இந்த பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டும், பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டும் உள்ளன. முக்கியமான சாலைகளில் முள்வேலி போட்டு அடைக்கப்பட்டு உள்ளதால் வாகன போக்குவரத்தும் பெரும்பாலும் முடங்கியுள்ளது.

அனந்தநாக் உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டாலும், பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன், வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic