ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள "பிரிக்ஸ்' மாநாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்தும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்தாலோசனை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள், தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது, அமைச்சர்கள் இருவரும் சுமார் அரை மணி நேரம் கலந்துரையாடினர். அப்போது, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழல் குறித்தும், எல்லைப் பகுதியில் தொடர் நிகழ்வாக உள்ள பயங்கரவாத ஊடுருவல்களை முறியடிப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மும்பையில் ஆயுதங்களுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் 4 பேர் சுற்றித்திரிந்ததாகக் கூறப்படுவது குறித்தும் விவாதித்தனர். கோவா மாநிலத்தில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதி நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாகவும் இருவரும் விவாதித்தனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Write comments