Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 25, 2016

சிறிய ஹெலிகாப்டர் மூலம் மருந்துகள் - புதிய கண்டுபிடிப்பு!


விஜய்சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தில் ஹெலிகாப்டர் மூலம் பணத்தை திருடும் காட்சியை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அதேபோல் அமெரிக்காவில் உள்ள அன்மேன் ஏரியல் என்னும் விமானம் தயாரிக்கும் நிறுவனம் ஒரு புது தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது. 

ஆனால், இது திருடுவதற்கல்ல; அவசர உதவியை நாடுபவர்களுக்காக. இந்த நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹெலிகாப்டர் மூலம் மருத்துவ ரீதியாக அவசர உதவியை நாடுபவர்களுக்கு விரைவான நேரத்தில் மருந்துகள் இதன் மூலம் அனுப்பப்படும். இதில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் சென்றடைய வேண்டிய இடத்தின் முகவரியை குறிப்பிட்டால் போதுமானதாகும். அந்த ஹெலிகாப்டர் நாம் செட் செய்யும் முகவரியின் தகவலுடன் இடத்தை சென்றடைந்துவிடும். 

வானில் பறந்து வருவதால் சாலையில் இருக்கும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளும் அவலம் இதற்கு இல்லை. அதனால், மற்ற வாகனங்களை ஒப்பிடும்போது, இந்த ஹெலிகாப்டர் விரைவாகவே அவசர தேவையை நிவர்த்தி செய்துவிடும். 2013ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இத்திட்டம் ஏனோ பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இத்திட்டத்தை கையில் எடுத்துள்ள அந்நிறுவனம் சோதனை ஓட்டத்தில் வெற்றியைக் கண்டுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic