வக்ஃபு வாரியச் சொத்துகள் தொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காண விரைவில் தனி ஆணையம் அமைக்கப்படும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
மத்திய வக்ஃபு கவுன்சிலின் 74வது கூட்டம் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நக்வி பேசியதாவது, நாடு முழுவதும் உள்ள வக்ஃபு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் குறித்து உயர்நிலையிலான விசாரணை நடைபெற்று வருகிறது.வக்ஃபு வாரியச் சொத்துகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அதன் ஒரு கட்டமாக, வக்ஃபு வாரியச் சொத்துகள் தொடர்பான புகார்களை விசாரித்து தீர்வு காண தனி ஆணையம் விரைவில் அமைக்கப்படும். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார்.
அதேபோல், ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயங்களும் அமைக்கப்படும் என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.இந்தியாவில் இரயில்வே துறைக்கு அடுத்தப்படியாக வக்ஃப் வாரியத்திற்கு அதிக சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments