Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

ஹிலாரிக்கு ஆதரவளிக்கும் எதிர்கட்சி முன்னாள் அதிபர்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கே தனது ஓட்டு என முன்னாள் அமெரிக்க அதிபரும், குடியரசு கட்சியை சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது. அதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில், அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68, போட்டியடுகிறார். இதன் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.


இந்நிலையில் 41வது அமெரிக்க அதிபராக பதவி வகித்த குடியரசு கட்சியை சேர்ந்த ஜார்ஜ் புஷ், ஹிலாரி கிளிண்டனுக்கே தனது ஓட்டு என தெரிவித்துள்ளார். குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் ஒருவர், எதிர் கட்சிக்கு ஓட்டளிப்பேன் எனத் தெரிவித்திருப்பது, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic