Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 21, 2016

எப்பொழுது விடிவு காலம் பிறக்கும்..?

தலை நகர் டெல்லியில் பட்டப்பகலில் ஆட்கள் நடமாடிக்கொண்டிருக்கும் இடத்தில் 21வயது பெண்ணை 30 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வழியே பல பேர் சென்றும் ஒருவர் கூட உயிர் பயத்தினால் குற்றவாளியை தடுக்க முன்வராதது வேதனை அளிக்கிறது.
 

டெல்லியில் நடைபெற்ற இச்சம்பவத்தின் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பு மேலும் ஒரு முறை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை அது தலை நகராக இருந்தாலும் சரி, ஓடும் இரயிலாக இருந்தாலும் சரி அல்லது தனது சொந்த வீடாக இருந்தாலும் சரி.  பெண்கள் என்னதான் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதே இல்லை. அப்படியானால் பெண்கள் தற்காப்பு குறித்து விவாதம் செய்வதை விட்டுவிட்டு குற்றம் புரிபவர் மீதான தண்டனை குறித்து ஆராய வேண்டிய நிலை வந்துவிட்டது.

சென்னையில் சுவாதி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டபோது ஒருவர் கூட தடுக்க முன் வரவில்லை. இதை விட கேவலம் குற்றவாளியை அடையாளம் காணுவதற்கு கூட மக்கள் தயாராகவில்லை என்பது மேலும் வேதனை தரக்கூடிய விசயம். இதில் குற்றவாளி என கூறப்பட்டு கைது செய்து தற்போது இறந்துவிட்ட ராம்குமார் முதற்கொண்டு பல்வேறு கேள்விகளுக்கும் விடை இல்லாமல் இருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை 35வயதான பெண் ஒருவரு ஓடும் இரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டது ஒரு கால் முறிந்துபோனது. இந்தியாவிலேயே இரயில்வே துறையில் அதிக குற்றங்கள் நடப்பதில் உத்திரபிரதேசம் இரண்டாவது இடத்திலும் மகாராஷ்டிரா முதலாவது இடத்திலும் இருக்கிறது.

அதே உத்திரபிரதேசத்தில் ஒரு தாயும் தன்னுடைய மகளோடு சென்று கொண்டிருந்தபோது இடையில் அவர்களை வழிமறித்து இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஒரு ஆண் நண்பரை கட்டிவிட்டு அவரோடு சென்ற இரண்டு இளம் பெண்களை கற்பழித்த சம்பவமும் நடைபெற்றுள்ளது.

இப்படி ஆயிரம் சம்பவங்களை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு சில வழக்குகள் மட்டுமே நிர்பயா வழக்குகள் போன்று வெளி உலகத்திற்கு காட்டப்படுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு துளி கூட குறையவில்லை எனபதே உண்மை. இதற்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்கும்...?

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic