Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 24, 2016

இதற்குமேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது! கர்நாடகா திட்டவட்டம்

 
தமிழகத்துக்கு காவேரி நீரை திறக்கக் கோரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து கர்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் சிறப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதில் காவேரி நீரை கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியதன் மூலம், தமிழகத்துக்கு நீரை திறக்க வாய்ப்பில்லை என சாதுர்யமான வார்த்தைகளில் மறைமுகமாக‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவேரி நதி நீர் பங்கீடு தொடர்பான மனுவை விசாரித்த‌ உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை,

‘‘த‌மிழகத்துக்கு செப்டம்பர் 21 முதல் 27ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவேரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும். 4 வாரத்துக்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்’’ என‌ உத்தரவிட்டது.

ஆனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய‌ அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவேரி நீர் கடந்த 20-ம் தேதி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து காவேரி விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக‌ சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையின் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை கூடியது. இதில் சிறப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

‘‘கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவேரியின் குறுக்கே உள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளிலும் 27.6 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த நீரை பெங்களூரு மாநகரம் மற்றும் காவேரி நீர்ப்பாசனப் பகுதிகளின் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த காரணத்துக்கும் இந்த அணைகளின் நீரை பயன்படுத்தக் கூடாது. தற்போதுள்ள இந்த குறைந்த அளவிலான நீரைக் கொண்டே 2017 ஜனவரி 31-ம் தேதி வரையிலான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

தீர்மானம் குறித்து முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

கர்நாடகாவில் அடுத்த மழைக் காலம் வரை காவேரி நீர்ப்பாசன பகுதி மக்களின் குடிநீருக்கு மட்டும் 24.11 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. போதிய மழை இல்லாததால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளும் நீரின்றி வறண்டு மிக மோசமான நிலையில் இருக்கின்றன. மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர் மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அவல நிலையில் தமிழகம் இல்லை. மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி 52 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. தமிழக விவசாயிகள் ஏற்கெனவே ஒரு போகம் வேளாண்மையை முடித்துவிட்டனர். தற்போது சம்பா பயிருக்காக மீண்டும் நீரை கேட்கின்றனர். நாங்கள் உயிருடன் வாழ்வதற்கே குடிநீர் இல்லாதபோது, சம்பா பயிர்களுக்கு எப்படி நீரை விட முடியும். அடுத்த ஆண்டு வரை நாங்கள் யாரிடம் போய் கையேந்துவோம்?

கர்நாடகாவில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றங்கள் மீது மிகுந்த மரியாதை உள்ளது. கனவிலும் நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை. கர்நாடகாவில் சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போகிறது. ஆனால் கடந்த 50 வருடங்களில் ஒருமுறைகூட தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பொய்க்கவில்லை. அடுத்த மாதமும் தவறாமல் வடகிழக்கு பருவ‌மழை அங்கே பொழியும். இதனால் அங்கு சம்பா சாகுபடியும், குறுவை சாகுபடியும் சிறப்பாக நடைபெறுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 மீட்டர் தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைக்கிறது. கர்நாடகாவில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால்தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. ஆனாலும் கர்நாடகாவிடம் காவேரி நீரை பெறுவதை தமிழகம் வாடிக்கையாக கொண்டுள்ளது'' என்றார்.

சித்தராமையாவின் உரைக்கு பிறகு சபாநாயகர் கோலிவாட் குரல் வாக்கெடுப்பு மூலம் சிறப்பு தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஒருமனதாக நிறைவேறி யதாக அறிவித்தார். இதே போல கர்நாடக சட்டமேலவையிலும் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத் தின் நகல் கர்நாடக ஆளுநர், மத்திய சட்டத்துறை, நீர்வளத்துறை மற்றும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காவேரி நீரை கர்நாடகாவில் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியதன் மூலம், தமிழகத்துக்கு நீரை திறக்க வாய்ப்பில்லை என சாதுர்யமான வார்த்தைகளில் மறைமுகமாக‌ தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எந்த இடத்திலும் சட்ட சிக்கலை உருவாக்காத வகையிலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்காத வகையிலும் தீர்மானம் எழுதப் பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து கர்நாடக அரசு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் நிலையில், இதை எடுத்துக்காட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல தமிழக விவசாய சங்கங்களும் கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரவும் திட்ட மிட்டுள்ளன. கர்நாடக அரசின் மீது இந்திய அரசியலமைப்பு பிரிவு 356-ஐ பயன்படுத்தி, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic