உத்திபிரதேசத்தில் 'கிசான் யாத்திரை' மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது ஷூ வீசப்பட்ட சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சிதப்பூரில் கிசான் யாத்திரை மேற்கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அங்குள்ள பத்திரிகையாளர் ஒரு ஷூ எறிந்தார். இதனை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது பெயர் ஹரிஓம் மிஸ்ரா என தெரியவந்துள்ளது.
உத்திரபிரதேச தேர்தலை மையமாக வைத்து 2000 கி.மீ தூதரம் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதற்கு அவர் கிசான் யாத்திரை என பெயர் வைத்துள்ளார். இது வெறும் கண்துடைப்புதான் என்றும் ராகுல் காந்தி நடத்திவரும் இந்த யாத்திரையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என ஹரி ஓம் மிஸ்ரா தெரிவித்தார்.
சிதாபூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள விவசாயிகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, " நாங்கள் தான் எங்களது ஆட்சியில் விவசாயிகளின் கடனை முற்றிலுமாக தள்ளுபடி செய்தோம். ஆனால் தற்போதைய மோடி அரசு ரகசியமாக கார்பரேட் நிறுவனங்களின் கடன்களைத்தான் தள்ளுபடி செய்துள்ளது. மோடி இன்டர்னெட் மூலம் விவசாயிகளை சந்திக்கிறாராம் அப்படியானால் விவசாயிகளிடமிருந்து 2000 கி.மீ தொலைவில் இருந்து தான் பேசுவார்." என விமர்சனம் செய்தார். இதனை அடுத்தே அவர் மீது ஷூ விசப்பட்டது.

No comments:
Write comments