நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சுவாதியின் வீடு கடந்த சில நாட்களாக பூட்டிக்கிடப்பதாகவும், அவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கலாம் என தமிழச்சி தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட சுவாதி தொடர்பாக பல்வேறு தகவல்களை அளித்து வரும் தமிழச்சி தற்போது அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் மற்றுமொரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ராம்குமாரின் மரணத்திற்கு பிறகு கடந்த சில நாட்களாக சுவாதியின் வீடு பூட்டப்பட்டு கிடக்கிறது. அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு யாரும் அவர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என தாம் சந்தேகப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கு அதனை தொடர்ந்து நடைபெற்ற ராம்குமாரின் மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இதுவரை முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments