Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Sep 26, 2016

விடுதலை புலி மீதான தடையை நீக்கக்கூடாது! - இலங்கை அமைச்சர்

not to remove ltte from terror list

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

'விடுதலைப் புலிகள் மீதான தடையை அவ்வளவ் எளிதில் அகற்ற முடியாது' என அமைச்சர அமெரிக்காவின் நியுயார்க் ரேடியோ ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 71வது மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இது தொடர்பாக‌ கருத்து தெரிவித்தார்.

முடிந்தவரை புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்கு ஐரோப்பிய யூனியன் நடவடிக்கைகள் எடுக்கும் என தாம் நம்புவதாக‌ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தான் 2006ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக பதவிவகித்த காலத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன், மிகவும் கஷ்டத்தின் மத்தியில் இந்த தடைவிதிப்புக்கு காரணமாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே குறித்த தடையினை நீக்குமாறு தற்போது பரிந்துரை செய்யும் புலி ஆதரவாளர்கள் இதற்கு முன்பும் இந்த தடையை நீக்குவதற்கு பல வேலைகளை செய்திருந்தாலும் அவை வெற்றியடையவில்லை என‌ அமைச்சர் தெரிவித்தார். அதே வேலையில் கடந்த மாதம் அமெரிக்கா விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்ததாகவும் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic