கடந்த 1999 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் மூலிகையில் இருந்து பெட்ரோல் எடுப்பதாக கூறி ராமர் பிள்ளை, ராமர் பெட்ரோல், ராமர் தமிழ்தேவி மூலிகை பெட்ரோல் என்ற பெயர்களில் விற்பனை செய்து வந்தார்.
ஆனால் மூலிகை பெட்ரோல் தயாரிக்க நாப்தா, டொலைன் போன்ற பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்தி அதை மூலிகையில் சேர்த்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு போலியாக தயாரித்தவற்றை அருகில் உள்ள விற்பனை நிலையங்களில் வைத்து சட்ட விரோதமாக மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி 2.27 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரனை நடத்தி, சென்னை எழும்பூர் பெருநகர கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மூலிகை பெட்ரோல் என்ற பெயரில் மோசடியில் ஈடுப்பட்ட ராமர்பிள்ளை, வேணுதேவி, சின்னசாமி, ராஜசேகரன், எஸ்.கே. பரத் உள்ளிட்ட 5 பேருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments