Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 9, 2016

இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா..!

america condemn israel

அமெரிக்காவும் இஸ்ரேலும் நெருங்கிய நட்பு நாடுகளாகவே மற்ற நாடுகளின் பார்வையில் உள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலின் மேற்கு கரைப்பகுதியில் புதிய யூதக் குடியிருப்புகளை அமைப்பது தொடர்பாக, இஸ்ரேலினை அமெரிக்கா கடுமையாக கண்டித்துள்ளது.

யூதர்களை அங்கு குடியமர்த்துவதால், பாலஸ்தீனர்களுடனான சமாதான பேச்சுவார்த்தை பாதிக்கும் என்றும் இது ஐக்கிய அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய உறுதிப்பாட்டுக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பாலஸ்தீனிய அரசாங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட, றமல்லா மற்றும் வடக்கே தொலைவில் உள்ள நப்லாஸுக்கும் இடையே பாதி தூரத்தில் அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் ஷிலோ என்பவர்களின் வீட்டுக்கான அலகுகள் அப்பகுதியில் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பல உதவிகளை செய்திருந்தாலும் அவற்றுக்கெல்லாம் மேலாக, ராணுவ உதவியாக 38 பில்லியன் அமெரிக்க டாலரை இஸ்ரேலுக்கு அடுத்துவரும் 10 ஆண்டுகளுக்கு வழங்கும் என கடந்த செப்டம்பர் 15 ல் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காஸா நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. அதை முறியடுக்கும் நோக்கில் வந்த 13 பெண்கள் உட்பட்ட படகொன்றையும் இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது இது தொடர்புடைய தகவலாகும்.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic