சூர்யா நடிக்கவிருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டிசம்பர் 16-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சூர்யா. அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்துக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் என்ற செய்திகள் வெளியான போது, அதற்கு ஹன்சிகா மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகி யார் என்பது ஞாயிற்றுகிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்தது.
அதன்படி 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
செய்தி :: சாஹிப்...
No comments:
Write comments