நண்பா, ஏன் அழுகிறாய்? உனக்குள் எல்லா சக்தியும் உள்ளது. பலசாலியே... உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகும் உனது காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே, ஜடமல்ல. தங்களை உடம்பாகக் கருதுகின்ற மூடர்கள்தான், ‘நாங்கள் பலவீனர்கள்’ என்று கதறுவார்கள். நாடு வேண்டுவது துணிச்சலும் விஞ்ஞான அறிவும் தீரமும் பேராற்றலும் அளவில்லா ஊக்கமுமே. பேடித்தனம் உதவாது. சிங்கத்தின் தீரமுள்ள செயல் வீரனையே திருமகள் நாடுவாள். பின்னால் பார்க்க வேண்டியதே இல்லை. முன்னே செல்லுங்கள்! எல்லையில்லாத வலிமையையும் எல்லையில்லாத ஊக்கமும் எல்லையில்லாத தீரமும் எல்லையில்லாத பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போதுதான் பெரும் பணிகளை ஆற்ற இயலும்.

No comments:
Write comments