Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Oct 14, 2016

முதலமைச்சர் பற்றி வதந்தி பரப்பிய மத போதகர்..!

christian preacher under investigation
முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறு பரப்பியதாக கிறிஸ்துவ பயிற்சி போதகரை, சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 22 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

முதல்வரின் உடல்நலம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதுவரை வெளியிடப்படாததால் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவதூறுகள் மிக வேகமாக பரப்பப்படுகின்றன. இதையடுத்து அவதூறு பரப்புவர்களை கண்டறிந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கடந்த சில தினங்களாக கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பியதாக திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் உள்ள புனித யாகப்பர் தேவாலயத்தின் பயிற்சி போதகர் அந்தோணி ஜேசுராஜை  சென்னை சைபர் கிரைம் போலீசார்  இன்று விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்று கோவை தொண்டாமுத்தூரில் இரண்டு வங்கி ஊழியர்கள் கைது செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic