அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் பிரபல கோடீஸ்வரர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். டொனால்டு டிரம்ப் மீது அடுத்தடுத்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில் கடந்த 1994ஆம் ஆண்டு 13 வயதான சிறுமி ஒருவரை டொனால்ட் டிரம்ப் பலாத்காரம் செய்ததாக தற்போது புதிய புகார் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் டொனால்ட் டிரம்பின் நிதி ஆலோசகரான ஜெப்ரி எப்ஸ்டெயின் என்பவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததாக அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த புகார்கள் அடிப்படை ஆதாரம் அற்றவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என டொனால்டு டிரம்ப் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சிறுமி பலாத்கார புகார் குறித்து வரும் டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எழுந்து வரும் புகார்களால் டொனால்டு டிரம்பின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளதாக அன்மையில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
No comments:
Write comments